"என் பெயர் சாரங்கபாணி
என் பாணி தனி "
என்று பஞ்ச் டயலாக் அடித்தபடி அறையின் ஒரு மூலையில் இருந்து தோன்றியது அந்த பேய்.
ஆவி அமுதன் அவஸ்தையுடன் நிமிர்த்து பார்த்தான்.
ஆவி அமுதன் முன்பு எல்லாம் ஆவிகளுடம் சாட்டிங் மட்டுமே நடத்தி வந்திருந்தான் .அவர்களை வெளி உலகிற்கு அவ்வப்போது வேடிக்கை காட்டி பிழைப்பு நடத்தியவன் .உஷாரான பேய்கள் அவனிடமிருந்து நிறைய எதிர்பார்த்தன.தங்கள் நிறைவேறாத ஆசைகளை கூறி அவற்றை இப்போதாவது நிறைவேற்றி தருமாறு வேண்டின.பின்பு மிரட்டின.
பணிந்த (பயந்த ) அமுதன் தன்னால் முடிந்த கோரிக்கைகளை நிறைவேற்றி வந்தான்.
சரவணா பவனில் 14 இட்லிஸ் வாங்கி தருவது,குட்டி பேய் ஒன்றுக்கு spiderman சட்டை தருவித்தது ,சினிமா பேய் ஒன்றை "சுறா" படத்திற்கு கூட்டி சென்று அதை மறுபடி சாகடித்தது என்று பல ஆசைகளை பூர்த்தி செய்தான். மேலும் , இலக்கிய பேய் ஒன்றிற்கு "பின்நவீனத்துவ முன்வரலாற்று நடுவண் அரசியல் " புத்தகம் ஒன்றை பரிசளித்து , அது இப்போது தனது சட்டையை கிழித்து கொண்டிருகிறது.
"என்ன பிரச்சினை தம்பி ? " அமுதன் வினவினான் .
"நான் இயல்பாகவே பெண்களை கண்டால் வெட்கப்படுவேன்" என்று வெட்கப்பட்டு காண்பித்து சாரங்கபாணி பேய் .(இனி "சாரங்" ).
அமுதன் இல்லாத தாடியை சொரிந்தான் . மாமா வேலை மட்டும்தான் இன்னும் பண்ணாமல் இருந்தான்.
"அதுக்கு இன்ன இப்போ?. நாளை வா.இப்போ எனக்கு தூக்கம் வருது. Sweet dreams ".
"நான் கூட ரத்த பொரியல் சாப்பிட்டு நாளாயிற்று " என்று அமுதன் கழுத்தையே பார்த்தது சாரங்.
ஜெர்க்கான அமுதன் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
"சொல் உன் கதையை." என்றான் அமுதன்.
"நான் ஒரு கணிபொறி நிபுணன்.எனக்கு oracle java எல்லாம் தெரியும்."
அமுதன் யோசித்தான் ..இதனிடம் தனக்கு ஒரு வெப்சைட் செய்ய சொன்னால் என்ன ?ஆனால் சாரங் இன்னும் கழுத்தையே பார்த்து பேசியதால் , வெறும் " இம் " கொட்டினான் .
"Tech Lead position , 8 lak ctc " என்றது சாரங்.
அமுதன் கொட்டாவி விட்டான்.. சுவர்கடிகரத்தை பார்த்தான்..கைகள் இரண்டையும் உயர்த்தி உடம்பை நெளித்தான்.
"கவனத்துடன் கேள்.இல்லையேல் நாளை என்பதே உனக்கு இருக்காது. என்னோடு இந்த ஓட்டை விழுந்த பனியனோடு நீ பரலோகம் வர வேண்டியதாய் இருக்கும். deal ஆ no deal ஆ ? ".
"இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு " என்று பரபரத்தான் அமுதன் .கல்யாணம் ஆகாத 30 வயதில் அவன் பூமியில் வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது.
சாரங் மறுபடி ஆரம்பித்தது .
"நான் பெண்களை கண்டால் ஒதுங்கியது போல், பெண்களும் என்னை கண்டால் ஒதுக்கினர்.
நான் காமெடி(காமநெடி? ) ஆக பேசுவது இல்லை ,கண்களை பார்த்து பேசுவது இல்லை (சத்தியமாக நான் வேறுங்கும் பார்ப்பது இல்லை ),
வேலை நேரத்தில் அவர்களுடன் அரட்டை அடிப்பது இல்லை,வேலை முடிந்தவுடன் அவர்களை pickup செய்யமால் நேரே mansion சென்று ஒளிவது ......இவ்வாரே நான் இருந்துள்ளேன்" .
"ஏன் இப்படி?.....தாயத்து எதாவுது கட்டி பாக்கவேண்டியது தானே ?" என்றான் அமுதன் .
அலட்சியம் செய்த சாரங் தொடர்ந்தது .
"என்னோடு வேலை பார்த்த மற்ற கழிசடைகள் , ஆறு மாததிருக்கு ஒரு figure வீதம் pickup - drop -escape -pickup என்ற ஒரு வட்டத்திற்குள் வீடு கட்டி ரோடு போட்டனர் .எல்லா figure உம் ஏற்கனவே புக் அகியிருந்தனர். சிலர் இரண்டு மூன்று வட்டத்திற்குள் சர்கஸ் செய்தனர்.
இவ்வாறாக காலமும் என் இளமையும் வீணாகி கொண்டிருந்த காலத்தில் புதிதாக ஒரு தேவதை எங்கள் கம்பெனயில் trainee ஆகா join செய்தாள்."
--மீண்டும் வருவேன்
No comments:
Post a Comment