Friday, June 18, 2010

டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்


***************************************************
அன்பரே , tamilish மற்றும் tamilmanam தில் வாக்களிக்க மறவாதீர் !

Friday, June 11, 2010

"Black Eyed Peas" copied "ilayaraja" Song.***************************************************
 அன்பரே , tamilish மற்றும் tamilmanam தில் வாக்களிக்க மறவாதீர் !

Thursday, June 10, 2010

செயல்படாத பிரதமர்?

நமது பாரத பிரதமர் , சாதாரண மக்கள் கொதிப்படையும் விஷயங்களில் கூட எந்த ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.

-->மும்பை தாக்குதலுக்கு , பாகிஸ்தானை பொறுப்பேற்க வைப்பது
-->தொடர்ந்து நடக்கும் நக்சல் தாக்குதல்களை வேரறுப்பது
-->சென்ற வருடம் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களை சிறைபிடிப்பது

மேலும், கீழே உள்ள விஷயங்களில், அவரின் கருத்து என்ன என்பது கூட யாருக்கும் தெரியவில்லை!!


-->கசாப் தூக்குதண்டனை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை களைவது
-->அப்சல் குரு தூக்குதண்டனை நிறைவேற்றுதல்
-->இலங்கை தமிழர் நலன்
-->இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள்
--> spectrum ஊழல்
--> IPL ஊழல்
-->போபால் விஷவாயு தாக்குதலுக்கு காரணமான anderson ஐ கைது செய்வது

இவ்விஷங்களை பற்றி மக்கள் கரடியாய் கத்தினாலும், அவர் தானுண்டு தன் தலப்பாக்கட்டு உண்டு என்றிருக்கிறார்.
(proxy பிரதமர் சோனியா கூட எதுவும் கருத்து தெரிவிப்பதில்லை.)

பிரதமர், இந்தியாவை ஆளுகிறாரா அல்லது சிங்கபூரை     ஆளுகிறாரா?

வாய் திறக்க கூட அவ்வளவு கஷ்டமாய் இருந்தால் , எதற்கு பிரதமர் பதவி? !


*****************************************************************************
அன்பரே , tamilish மற்றும் tamilmanam தில் வாக்களிக்க மறவாதீர் !

Tuesday, June 8, 2010

ஜன்னல்-08/06/10


***************************************************
அன்பரே , tamilish மற்றும் tamilmanam தில் வாக்களிக்க மறவாதீர் !

தமன்னா,அனுஷ்கா மற்றும் அவள் !

opening scene ஐ தவற விட்டவர்கள், இதை முதல்ல படிங்க .(என் பெயர் சாரங்கபாணி)Diet Coke குடித்த சாரங் மறுபடி தொடர்ந்தது .

"அவள் பெயர் பூஜா .(திரை உலகின் ராசியான கதாநாயகி பெயர். )

தமன்னா வை போல் அவளை வடிவமைத்து கொண்டிருந்த பிரம்மன் , இடையில் கிராஸ் ஆன அனுஷ்கா வை பார்த்து அசந்து, மீதியை அனுஷ்காவை போல் முடித்தான். அப்படி இருவரின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்திருந்தாள் பூஜா .கம்பெனி இல் அனைவரும், இருவர் மூவர் ஆக குழுக்கள் அமைத்து , அவள் அழகை பட்டிமன்றம் நடத்தினர்.

HR formalities முடித்து, நேரே என்னை நோக்கி நடந்து வந்தாள், அந்த பூஜா.என் basement வீக்காக, பற்கள் தந்தியடிக்க அவளை எதிர்கொண்டேன்.--மீண்டும் வருவேன்
 
***************************************************
 
அன்பரே , tamilish மற்றும் tamilmanam தில் வாக்களிக்க மறவாதீர் !

என் பெயர் சாரங்கபாணி

"என் பெயர் சாரங்கபாணி
என் பாணி தனி "
என்று பஞ்ச் டயலாக் அடித்தபடி அறையின் ஒரு மூலையில் இருந்து தோன்றியது அந்த பேய்.


ஆவி அமுதன் அவஸ்தையுடன் நிமிர்த்து பார்த்தான்.


ஆவி அமுதன் முன்பு எல்லாம் ஆவிகளுடம் சாட்டிங் மட்டுமே நடத்தி வந்திருந்தான் .அவர்களை வெளி உலகிற்கு அவ்வப்போது வேடிக்கை காட்டி பிழைப்பு நடத்தியவன் .உஷாரான பேய்கள் அவனிடமிருந்து நிறைய எதிர்பார்த்தன.தங்கள் நிறைவேறாத ஆசைகளை கூறி அவற்றை இப்போதாவது நிறைவேற்றி தருமாறு வேண்டின.பின்பு மிரட்டின.


பணிந்த (பயந்த ) அமுதன் தன்னால் முடிந்த கோரிக்கைகளை நிறைவேற்றி வந்தான்.
சரவணா பவனில் 14 இட்லிஸ் வாங்கி தருவது,குட்டி பேய் ஒன்றுக்கு spiderman சட்டை தருவித்தது ,சினிமா பேய் ஒன்றை "சுறா" படத்திற்கு கூட்டி சென்று அதை மறுபடி சாகடித்தது என்று பல ஆசைகளை பூர்த்தி செய்தான். மேலும் , இலக்கிய பேய் ஒன்றிற்கு "பின்நவீனத்துவ முன்வரலாற்று நடுவண் அரசியல் " புத்தகம் ஒன்றை பரிசளித்து , அது இப்போது தனது சட்டையை கிழித்து கொண்டிருகிறது.


"என்ன பிரச்சினை தம்பி ? " அமுதன் வினவினான் .


"நான் இயல்பாகவே பெண்களை கண்டால் வெட்கப்படுவேன்" என்று வெட்கப்பட்டு காண்பித்து சாரங்கபாணி பேய் .(இனி "சாரங்" ).


அமுதன் இல்லாத தாடியை சொரிந்தான் . மாமா வேலை மட்டும்தான் இன்னும் பண்ணாமல் இருந்தான்.


"அதுக்கு இன்ன இப்போ?. நாளை வா.இப்போ எனக்கு தூக்கம் வருது. Sweet dreams ".


"நான் கூட ரத்த பொரியல் சாப்பிட்டு நாளாயிற்று " என்று அமுதன் கழுத்தையே பார்த்தது சாரங்.


ஜெர்க்கான அமுதன் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
"சொல் உன் கதையை." என்றான் அமுதன்."நான் ஒரு கணிபொறி நிபுணன்.எனக்கு oracle java எல்லாம் தெரியும்."அமுதன் யோசித்தான் ..இதனிடம் தனக்கு ஒரு வெப்சைட் செய்ய சொன்னால் என்ன ?ஆனால் சாரங் இன்னும் கழுத்தையே பார்த்து பேசியதால் , வெறும் " இம் " கொட்டினான் ."Tech Lead position , 8 lak ctc " என்றது சாரங்.அமுதன் கொட்டாவி விட்டான்.. சுவர்கடிகரத்தை பார்த்தான்..கைகள் இரண்டையும் உயர்த்தி உடம்பை நெளித்தான்."கவனத்துடன் கேள்.இல்லையேல் நாளை என்பதே உனக்கு இருக்காது. என்னோடு இந்த ஓட்டை விழுந்த பனியனோடு நீ பரலோகம் வர வேண்டியதாய் இருக்கும். deal ஆ no deal ஆ ? "."இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு " என்று பரபரத்தான் அமுதன் .கல்யாணம் ஆகாத 30 வயதில் அவன் பூமியில் வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது.சாரங் மறுபடி ஆரம்பித்தது .
"நான் பெண்களை கண்டால் ஒதுங்கியது போல், பெண்களும் என்னை கண்டால் ஒதுக்கினர்.
நான் காமெடி(காமநெடி? ) ஆக பேசுவது இல்லை ,கண்களை பார்த்து பேசுவது இல்லை (சத்தியமாக நான் வேறுங்கும் பார்ப்பது இல்லை ),
வேலை நேரத்தில் அவர்களுடன் அரட்டை அடிப்பது இல்லை,வேலை முடிந்தவுடன் அவர்களை pickup செய்யமால் நேரே mansion சென்று ஒளிவது ......இவ்வாரே நான் இருந்துள்ளேன்" ."ஏன் இப்படி?.....தாயத்து எதாவுது கட்டி பாக்கவேண்டியது தானே ?" என்றான் அமுதன் .அலட்சியம் செய்த சாரங் தொடர்ந்தது .
"என்னோடு வேலை பார்த்த மற்ற கழிசடைகள் , ஆறு மாததிருக்கு ஒரு figure வீதம் pickup - drop -escape -pickup என்ற ஒரு வட்டத்திற்குள் வீடு கட்டி ரோடு போட்டனர் .எல்லா figure உம் ஏற்கனவே புக் அகியிருந்தனர். சிலர் இரண்டு மூன்று வட்டத்திற்குள் சர்கஸ் செய்தனர்.

இவ்வாறாக காலமும் என் இளமையும் வீணாகி கொண்டிருந்த காலத்தில் புதிதாக ஒரு தேவதை எங்கள் கம்பெனயில் trainee ஆகா join செய்தாள்."


                                                                                                          --மீண்டும் வருவேன்

Saturday, June 5, 2010

வீடு

வாழ்நாள்ல single B/R, double B/R அப்படின்னு வசிக்க வளமான வீடு தேடி நாக்கு தள்ள ஓயாம ஓடுறோம்.
ஆனா உலக கிறித்துவர்கள் மனதில் குடி இருக்கும் மேரி மாதா , ஆயுள் முடியும் பொது கடைசியா குடிஇருந்த வீடு துருக்கி ல இருக்கு.
அங்கே சென்றபோது "எளிமை" அப்படிகரதுகு அர்த்தம் புரிஞ்சது .Ephesus என்ற சிதைந்த நகரத்தில் ஒரு சிறு மலையின் மீது இரண்டே குறுகிய அறைகள் உள்ள வீட்டில் அந்த (உலகை ) ஆண்டவனின் தாய் வாழ்ந்திருக்கிறார்.

                                                          படத்தில் அந்த வீடு.